ஸூரத்து அன்ஆம் விஞ்ஞானத் தப்ஸீர் — front cover

ஸூரத்து அன்ஆம் விஞ்ஞானத் தப்ஸீர்

ஆசிரியர்: RAHMATH RAJAKUMARAN

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                                                         அறிவியல் ரீதியாக                  அல்குர்ஆனின் விரிவாக்கம்    சூரத்து அன்ஆம் -ன் சிறப்புகள் :- இந்த சூரத்து அன்ஆம் முழுவதும் மக்கமா நகரில் ஒரே ஓர் இரவில் மொத்தமாக அருளப்பட்டது. இதனுடன் 70 ஆயிரம் மலக்குகள் வானம் பூமி ஆகிய இரண்டிலும் நிரம்பியவர்களாகவும் தஸ்பீஹ் , தஹ்மீது தம்ஜீது ஆகியவற்றைச் சப்தமிட்டு ஓதுபவர்களாகவும் வந்தார்கள். இவர்களது சப்தத்தால் பூமியும் கூட தழும்பியது. மேலும் அடிவானத்தை அடைத்து கொள்ளுமளவிற்கு மலக்குகள் வருகை தந்தார்கள்’ அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹான றப்பியில் அலீம், சுப்ஹான றப்பியில் அலீம் என்று கூறி இறைவனுக்கு சுஜூது செய்தார்கள். என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் ரலி அவர்கள் ( நூல்: தப்ரானீ )   எவர் சூரத்துல் அன்ஆமை ஓதுகிறாரோ அவருக்காக அந்த 70 ஆயிரம் மலக்குகளும் அந்த இரவிலும் பகலிலும் ஸலவாத்துச் சொல்கிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி, பின்னர் வஹியை எழுதிவைப்பவர்களை அழைத்து, அது அருளப்பட்ட அதே இரவில் அந்த அன்ஆம் சூரா முழுவதும் எழுதும்படி கட்டளையிட்டார்கள் என்று கூறப்படுகிறது.   எவர் சூரத்துல் அன்ஆமின் முதல் மூன்று ஆயத்துகளை ஓதுகிறாரோ, அவர் ஓதிய அன்றைய காலையில் அவரைச் சகல தீங்குகளையும் விட்டுக் காக்க 70ஆயிரம் மலக்குகளை அல்லாஹுத்தஆலா அவர் மீது நியமிக்கிறான். கியாமத்துநாள் வரை அந்த மலக்குகள் செய்யும் அமல்களைப்போல்,அவருக்கு நன்மையை எழுதுகிறான். தவிர, அவரது இருதயத்தில் ஷைத்தான் ஒரு தீங்கைப்போட நாடினால், அவர் போடும் போதெல்லாம் ஏழாவது வானத்திலிருந்து ஒரு மலக்கு இரும்பு வலயங் கொண்டு வந்து

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…