அறிவியல் அறிவியல்-100 ரஹ்மத் ராஜகுமாரன்
மனிதன் பிறந்தது அறிவைத் தேடுவதற்காகவே. அறிவின் மூலம் இறைவனை அறிந்து கொள்வதற்காக அறிவியலின் வளர்ச்சி மனிதனை இருள் சூழ்ந்த அறியாமையிலிருந்து வெளிச்சம் நிறைந்த அறிவு உலகத்திற்கு கொண்டு வந்தது, கற்காலம் முதல் விண்வெளியுகம் வரை அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது இஸ்லாம் அறிவியலுக்கு அளிக்கும் முக்கியத்துவம் அற்புதமானது “இக்ரா” (படி) என்ற சொல் மூலமாகவே அல்லாஹ் வெளிப்படுத்திய முதல் உத்தரவு மனிதனை அறிவின் பாதையில் நிறுத்தியது. அறிவை தேடுவது ஒரு வழிபாடு உண்மையை அறிதல் ஒரு கடமை, அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் நியாயத்தைப் பேணுவது ஒரு பொறுப்பு என்று இஸ்லாம் கூறுகிறது. அறிவியல் என்பது பொருளை ஆராய்வது!!! இஸ்லாம் என்பது அந்தப் பொருளின் அர்த்தத்தை உணர்த்துவது ஒன்று வெளி உலகை வெளிச்சப்படுத்துகிறது மற்றொன்று உள்ளம் ஒளிரச் செய்கிறதது அறிவியலின் ஒளி இல்லாமல் இஸ்லாமின் நெறி முழுமையடையாது இஸ்லாமின் நெறிமுறை இல்லாமல் கண்டுபிடிக்கப்படும் அறிவியலின் கண்டுபிடிப்புகள் மனித நலனுக்குப் பதிலாக அழிவை உருவாக்கும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள “அறிவியல் அறிவியல்” என்ற 100 கட்டுரைகள் அறிவியலின் வளர்ச்சியைப் பற்றிய சிந்தனைகள், அதன் மூலம் மனித வாழ்க்கை அடைந்த நன்மைகள் என்ன என்பதை விரிவாக பேசுகிறது உலகில் அறிவியல் வளர்ச்சிக்கான வேர்கள் பெருமளவில் இஸ்லாமிய அறிஞர்கள் மூலம் பரவின இஸ்லாமிய பொற்காலம் (Golden Age of Islam – கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை) என்பது மனித அறிவியலின் அடித்தளத்தை அமைத்த ஒரு சிறப்பான காலம். முக்கியமான இஸ்லாமிய அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய விரிவான பட்டியல் மற்றும் அவர்களின் பங்களிப்பு விளக்கம் கீழே கொடுக்கப்
Loading comments…