சூஃபி ஞானப் பொக்கிஷங்கள் -2024
#Treasure of wisdom பறவைகளின் இறக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தை குறிக்கும் காலையில் கூட்டை விட்டு இரை தேடசென்ற பறவைகளின் எண்ணங்களும் தேடல்களும் உணவின் ஆர்வமும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் மாலையில் கூடு திரும்பும் எண்ணமும் நோக்கமும் ஒன்றாக இருக்கும் இறை படைப்பில் நாம் அனைவருமே கடைசியில் அவனிடத்தில் சென்று சேர போகிறவர்கள் நாம் பயணிக்கும் பாதைகளும் பயணப்படும் விதமும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் நாம் சென்றடைவது அவனிடம் மட்டுமே!!! "உண்மை வழி ஒன்றே; ஆனால் அதை அடைய பல வழிகள் இருக்கின்றன." இந்த நூலில் நீங்கள் படிக்கவிருக்கும் கதைகள் வழக்கமான கற்பனை கதைகள் அல்ல இவை சூஃபிகளின் (இறைநேசர்கள்) ஆன்மிக ஞானத்தையும், சிந்தனையையும் வெளிப்படுத்தும் வாழ்வியல் நெறிமுறைகள் ஒவ்வொரு கதையும் வெளிப்படையாகத் மறைமுகமாக தோன்றும் ஒரு நிலையின் பின்புலத்தில் மறைந்திருக்கும் ஆழமான உண்மையை சுட்டிக்காட்டுகின்றன. இறைநேசர்கள் பலர் தங்கள் அனுபவங்களையும் அறிவையும் கதைகளின் மூலம் தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துரைத்தனர் காரணம், மனித மனது நேரடியான அறிவுரைகளுக்குப் பதிலாக, கதைகளின் வழியாக உண்மையை சிந்திக்க விரும்புகிறது. அதில் இருந்து மனிதன் தனது நேரடி அனுபவத்தின் வழியாக உண்மையைத் தேட ஆரம்பிக்கிறான். இந்தக் புத்தகம் சிந்திக்க வைக்கும் சில சமயங்களில் கேள்வி எழுப்ப வைக்கும் சில நேரங்களில் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசும் அவை யாருக்கும் நேரடி தீர்வைக் கொடுக்காது. ஆனால் உங்கள் உள்ளத்தில் உறைந்திருக்கும் கேள்விகளுக்கு, நீங்கள் தான் பதில் கண்டுபிடிக்க உதவியளிக்கும். இந்த நூல் மாணவர்களுக்கும் ஆன்மீக ஆர்வமுள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆன்
Loading comments…