கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் - ஷெய்க் சாலிஹ் அல் பவ்ஸான்
கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் Author: ஷெய்க் சாலிஹ் அல் பவ்ஸான் Translator's Name: Y.M.S.I.இமாம் ரஷாதி-பெங்களூர் Reviser's Name: முஹம்மத் அமீன் கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் என்னுரை அளவற்ற அருளாளனும் நிகற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன் புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் நமது தூதர் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக. ஒரு சமூகம் உயர்வு பெற கல்வி அவசியம். கல்வியில்லாத சமூகம் உயர்வு பெறாது. உலகில் அடக்கி, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பின்னர் கல்வியின் மூலம் தலை நிமிர்ந்து நின்றதை வரலாறு நெடுகிலும் காணலாம். பெரும் குடிமக்கள் கல்வியறிவு இல்லாத போது ஒடுக்கப் படுகின்ற தலை கீழ் மாற்றத்தையும் காண முடி றது . இதுவெல்லாம் உலக கல்வியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் காட்டுகின் கின்றன. ஆனால் முஸ்லிம் சமூகத்தைப் பொருத்த வரையில், மறு உலகத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். எனவே இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸலிம்களின் மீதும் கடமை. எனவே மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், அது இல்லாது போனால் விளைவு என்னவாகும் என்பது பற்றியும் ஸ ஊ தீ அரேபியாவின் பிரசித்தி பெற்ற மாமேதை அஷ்ஷைக்ஸாலிஹ் பின் பௌஸான் அல் பௌஸான் அவர்கள் என்ற யெரில் கையேடொன்றை எழுதியுள்ளார். அதனை
Loading comments…