இதுவே நமது அழைப்பு — front cover

இதுவே நமது அழைப்பு

ஆசிரியர்: அஷ்ஷேஹ் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்)

இதுவே நமது அழைப்பு அல் இமாம் முஹம்மத் நாஸிருத்தீன் அல் அல்பானி ஆங்கில வழித் தமிழாக்கம் 41 பக்கங்கள் www.masjiduthmanbinaffan.blogspot.com masjiduthmanbinaffan@gmail.com +94 77 7711019 இந் நூல் இலவச விநியோகமாகும். இதன் பிரசுர உரிமை பதிப்பகத்தினருக்குரியதாகும். இது மின்னூல் வடிவில் நமது இணைய தளத்தில் உள்ளது. عثمان بن عفان Masjid Uthmaan Bin Affaan Sri Lanka இதுவே நமது அழைப்பு நூல் அறிமுகம்: இது இமாம் அவர்களது உரையொன்றின் நூலாக்கமாகும். இது "இதுவே நமது அழைப்பு' என்ற பெயரில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. அவ் ஒளிப்பதிவின் நேரடி ஆங்கில மொழியாக்-கத்திலிருந்து தமிழாக்கப்பட்டதே உங்கள் வாசிப்புக்காக இருக்கும் இந் நூல். இதில் இஸ்லாத்தில் இல்ம் (அறிவு) என்பதன் யதார்த்தம், அதனை சுமப்போரது யதார்த்தம் என்பதோடு அதனூடே இம் மார்க்கத்தினது சரியான (மன்ஹஜ் எனும்) அணுகுமுறை என்னவென்பதைப் பற்றிய தொரு விபரமான விரிவுரையினை இமாமவர்கள் அள்ளாஹ்வின் தவ்ஃபீக்கோடு வழங்கியுள்ளார்கள். இந் நூல் முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொருவரும் கற்றுத் தெளிய வேண்டிய மிக முக்கியமான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. (உஸ்தாத் இப்ராஹீம் என்பவரின்) அறிமுகவுறை: அள்ளாஹ்வின் பெயரால், அள்ளாஹ்வுக்கே புகழ் அனைத்தும்; அள்ளாஹ்- வின் ஸலவாத்தும் ஸலாமும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் மீது நிலவட்டு-மாக. அதனைத் தொடர்ந்து, நிச்சயமாக, உயர்ந்தோனான அள்ளாஹ் எம்மீது ஈமானின் அருளை சொரிந்துள்ளான்,மேலும் அவன் அனைத்து முஸ்லிம் உம்மத்திற்கும் அறிஞர்களின் மூலம் அருள் புரிந்துள்ளான்; அவர்களையே அறிவின் மூலமாக அள்ளாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். ஆகவே (உலமாக்கள் ஆகிய) அவர்களால் மக்களுக்கு அ

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…