நபி (ஸல்) அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும்
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும் அல்லாஹ் ஹதீஸுல் குத்ஸியில் குறிப்பிடுகிறான்: என்னை ஒரு அடியான் உபரியான ஸுன்னத்தான வணக்கங்கள் மூலம் நெறுங்கும் போது நான் அவனை விரும்புகின்றேன். எழுத்தாக்கம் : கலாநிதி அப்துல்லாஹ் பின் ஹமூத் அல் ஃபுரைஹ் முன்னுரை : கலாநிதி காலித் அல் முஷைகிஹ் இந்நூல் முழுப் பதிப்புரிமை செய்யப்பட்டது.எவரேனும் இதை வேறு மொழிக்கு மொழியாக்கம் செய்ய அல்லது அறப்பணியாக அச்சிட்டு வெளியிடுவதாயின்,நூலாசிரியன் அனுமதியுடனும்,மீள்பரிசீலனையின் பின்னரும் மேற்கொள்ளலாம். இந்நூல் பத்து மொழிகளுக்கும் மேல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் உள்ளடக்க தலைப்புக்கள் முன்னுரைகள் தலைப்பு முன்னுரை அனிந்துரை ஸுன்னாவின் கருத்து ஸுன்னாவை கடைபிடிப்பதில் முன்னோர் காட்டிய ஆர்வத்திற்கான சான்றுகள் ஸுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றுவதன் பயன்கள் நேரம் குறிக்கப்பட்ட ஸுன்னத்தான வழிமுறைகள் நேரம் குறிக்கப்படாத -பொதுவானஸுன்னத்துக்கள் கலாநிதி காலித் அல் முஷைகிஹ்.அவர்களின் முன்னுரை. புகழனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே. சாந்தியும் ஸலவாத்தும் நபிகளார் மீது உண்டாகட்டும். என வேண்டியதன் பின். நூலாசிரியர் கலாநிதி அப்துல்லாஹ் பின் ஹமூத் அல் ஃபுரைஹ்.அவர்களது இந்த நூலான {அல் மினஹுல் அலிய்யா ஃபீ பயானிஸ்ஸுனனில் யவ்மிய்யா}. இதில் நூலாசிரியர் மிக நுணுக்கமாக சிறந்த அமைப்பில் நபிகளாரது இரவு,பகல் என நாளாந்த வார்த்தை, செயல் சார்ந்த தனியான ஸுன்னாக்களை கொண்ட மிக பயனுள்ள ஒரு தொகுப்பை தொகுத்திருந்திருக்கின்றார். அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்கட்டும்.மேலும் இவரின் இந்நூல் பயனுள்ளதாகவும் அமையட்டும்.என அல்லாஹ்வை வேண்டிக் கொள்கின்றேன்.
Loading comments…