நபித்தோழர்களின் சிறப்புகள் 2024 ரஹ்மத் ராஜகுமாரன் — front cover

நபித்தோழர்களின் சிறப்புகள் 2024 ரஹ்மத் ராஜகுமாரன்

ஆசிரியர்: RAHMATH RAJAKUMARAN

அணிந்துரை நபித்தோழர்களின் சிறப்புகள்  இந்த உலகில் எவரும் பெறாத, இனியும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர். நபி(ஸல்) அவர்களது நட்பு எனும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதை யாரும் பெற முடியாது. வஹி இறங்குவதையும் அதன் அடையாளங்களையும் கண்களால் கண்டனர். இனி இதை யாரும் அடைய முடியாது. இவ்வாறு யாரும் பெறமுடியாத பெரும் பாக்கியத்திற்குரியவர்களாக அல்லாஹ்வே அவர்களைத் தேர்ந்தெடுத்தான். தனது நபியின் நண்பர்களாக தனது மார்க்கத்தின் உதவியாளர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமாக அவர்கள் இருப்பதே அவர்களின் சிறப்புக்களுக்கெல்லாம் மகுடமாகத் திகழ்கின்றது. அவர்கள் அல்லாஹ்வினாலேயே ‘முஃமின்கள்’ என்றும், ‘நேர்வழி பெற்றவர்கள்’ என்றும், சிறந்த சமூகம் என்றும் சிலாகித்துப் போற்றப்பட்டவர்கள். ‘அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டதாக அறிவித்துவிட்ட’ பிறகு சிலர் அவர்ளைப் பொருந்திக் கொள்ள முடியாது என்று அடம் பிடிப்பது வழிகேட்டின் அடையாளம் என்றால் எள்ளளவும் சந்தேகமில்லை. நபித்தோழர்களைக் குறை கூறுவதும், அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதும், அவர்களுக்கு மார்க்கம் தெரியாது, குர்ஆன் தெரியாது, ஹதீஸ் தெரியாது, உலகம் தெரியாது, விஞ்ஞானம் தெரியாது என்றெல்லாம் குத்திப் பேசுவதும், கிண்டலடிப்பதும் ஆணவத்தினதும், அறியாமையினதும், வழிகேட்டினதும் அடையாளமன்றி வேறில்வை இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை அழிப்பதற்குப் பல வழிகளைக் கைக்கொள்கின்றர். குர்ஆனை மறுக்கும் நிலைக்கு முஸ்லிம்களைக் கொண்டு வர வேண்டும். நேரடியாக குர்ஆனை மறுக்க வைக்க முடியாது. எனவே, ஹதீஸ்களை மறுக்கச் செய்வத

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…