3-அறிவியல் ரீதியாக அல்குர்ஆனின் விரிவாக்கம் — front cover

3-அறிவியல் ரீதியாக அல்குர்ஆனின் விரிவாக்கம்

ஆசிரியர்: RAHMATH RAJAKUMARAN

அறிவியல் ரீதியாக அல்குர்ஆனின் விஞ்ஞான தப்ஸீர் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு தோன்றியது என்று நண்பர்கள் என்னிடம் கேட்பது உண்டு அதற்கான விளக்கம் 15.10 23 ஞாயிறு அன்று ஈரோடு ஏகத்துவ மெஞ்ஞான சபை நடத்திய மீலாது விழாவில் காலையில் நடைபெற்ற குர்ஆன் விஞ்ஞான கருத்தரங்கில் என் சிற்றுரையின் சாரம்சம். "உலகை மாற்றியமைத்த 100 பேர்கள் "புத்தகம் எழுதிய மைக்கேல் ஹெச். ஹார்ட் சொன்னார் : "நான் சமீபத்தில் கெய்ரோவில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அக்கூட்டத்தில் பேசிய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் இஸ்லாத்தை ஒரு ஆன்மீக மார்க்கம் என்ற அடிப்படையில்-உணர்வில் பேசினார்களே தவிர, அறிவியல் போக்கில் யாருமே பேசாதது எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.  இஸ்லாத்தில் ஆன்மீகம் ஒரு பகுதி மட்டுமே. மற்றபடி அறிவியல் போக்கிலான மார்க்கமே இஸ்லாம் என்பது எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமல்ல; உண்மையும் கூட ஏனோ, இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் பக்கமே போக மாட்டேன் என்கிறார்கள்.  அறிவியல் அடிப்படையில் இஸ்லாத்தை விளக்கினால் அல்லவா இஸ்லாத்தினுடைய சிறப்பு மட்டுமல்ல, பெருமானாரின் வாழ்வும் வாக்கும் எந்த அளவுக்கு உலகுக்கு வழிகாட்டும் தன்மையுடையதாக விளங்குகிறது என்பது புலப்படும்.  மைக்கேல் ஹெச்.ஹார்ட் பேசும்போது அவர் உச்சரித்த “Islam is a Scientific way of life" என்ற வாசகம் மிக முக்கியமான வார்த்தை.ஒரு யூதராக இருந்தும் இஸ்லாத்தின் மீது இந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் உடையவராக இருப்பதோடு, தன் உள்ளத்து உணர்வுகளைப் பிசிறில்லாமல் பதிவு செய்ய முற்படும் அவரது நடுவு நிலைப் போக்கு, அவரின் மீது எனக்கு மிகுந்த மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது" என மணவை முஸ்தபா அவர்கள் குறிப்பிடுகி

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…