அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?
அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? தொகுப்பு கலாநிதி U.L. அஹ்மத் அஷ்ரப் (Ph.D. Al-Azhar) தலைவர், தாறுல் ஹதீஸ், கொழும்பு. உதவிப் பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், அப்ஹா, சஊதி அறேபியா. بسم الله الرحمن الرحيم ஹதீஸ் குர்ஆன், ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கிணங்க அல்லாஹ் 'அர்ஷ்” மீது உள்ளான் என நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். ‘அரஷ்” என்ற சிம்மாசனம் ஏழு வானங்களுக்கு அப்பால் உள்ளது. அதுதான் சிருஷ்டிகளின் (படைப்பினங்களின்) இறுதிப்பகுதியாகும். இதே நம்பிக்கையில்தான் ஸஹாபாக்கள், தாபியீன்கள், வாழ்ந்து வந்தனர். அதே போன்று மத்ஹபுகளுக்குரிய நான்கு இமாம்களாகிய அபூஹனீபா (ரஹ்), மாலிக் (ரஹ்), ஷாபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மற்றும் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்ற இமாம்களாகிய புஹாரி (ரஹ்), முஸ்லிம் (ரஹ்) அபூதாவூத் (ரஹ்), திர்மிதீ (ரஹ்), நஸாஈ (ரஹ்), இப்னுமாஜா (ரஹ்) ஆகியோர்களும் இக்கொள்கையைத் தான் வலியுறுத்தியுள்ளார்கள். முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யமான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் இக்கொள்கையை வலியுறுத்துகிறார்கள்.
Loading comments…