மல்பூஜாத் கிதாபிற்கு மறுப்பு — front cover

மல்பூஜாத் கிதாபிற்கு மறுப்பு

ஆசிரியர்: jafarulla saqafi

மல்பூஜாத் கிதாபிற்கு மறுப்பு தப்லீக் ஜமாஅத்தினரை எதற்காக எதிர்க்கிறீர்கள் அவர்கள் தொழுகைக்குத்தானே அழைக்கிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் அந்த வேலையை மட்டும் செய்தால் நாம் ஏன் அவர்களை எதிர்க்க போகிறோம். ஒரு பக்கம் தொழுகைக்கு அழைக்கிறார்கள். மறுபக்கம் அவர்கள் சத்திய இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அது எத்தனையோ இருக்கிறது. அதை எல்லாம் இங்கே எழுதினால் இந்த கட்டுரை மிகவும் பெரிதாகிவிடும். இன்று இந்த கட்டுரையில் நாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் பார்க்கப் போகிறோம். மல்பூசாத் கிதாபில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷமத்தனமான விஷயத்தை விளக்கமாக சொல்வதற்காகத் தான் இந்த கட்டுரை. பாவமே செய்யாதவர்கள் நபிமார்கள் நபிமார்கள் சிறு பாவங்கள் பெரும் பாவங்கள் எல்லாவற்றிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள். நுபுவத்திற்கு முன்பும் நுபுவத்திற்கு பின்பும் அவர்கள் எந்த பாவமும் செய்ய மாட்டார்கள். பாவங்களை செய்ய தூண்டுபவனே சைத்தான்தான். அந்த சைத்தானே நபிமார்கள் மீது ஆதிக்கம் கொள்ள முடியாது. இதோ அதற்கான குர்ஆன் வசனம். اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَـعَكَ مِنَ الْغٰوِيْنَ‏ “ நிச்சயமாக என் அடியார்கள் மீது (ஷைத்தானே) உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான். ( அல்குர்ஆன் : 15:42) மல்பூசாத் என்றால் என்ன ? மல்பூசாத் என்றால் வாயில் இருந்து வந்த வார்த்தை என்று அர்த்தம்.   தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகர் இல்லியாஸுடைய வாயிலிருந்து வந்த வார்த்தையை அந்த புத்தகத்தில் தொகுத்து வெளியிட்டு இருப்பதால் அந்த புத்தகத்தை மல்பூசாதேஇலியாஸ் என்று

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…