குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை — front cover

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

ஆசிரியர்: S. அப்பாஸ் அலீ M.I.Sc.

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை S. அப்பாஸ் அலீ M.I.Sc . புத்தக விவரக்குறிப்பு: நூல் பெயர்: குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்க்கை ஆசிரியர்: S. அப்பாஸ் அலி, M.I.Sc . மொழி: தமிழ் பதிப்பு: ஜனவரி 2012, ஜுந்தாம் பதிப்பு பதிப்புரிமை: ஆசிரியருக்கே பக்கங்கள்: 72 பதிப்புகள்: 2000 ஒளி அச்சுக்கோவை: சன் கிராபிக்ஸ், சென்னை – 1 அச்சிடுபவர்: சன் பிரிண்டிங் எஜென்சி, செல்: 94438 79861 வெளியீடு: சன் பப்ளிகேஷன்ஸ், தொண்டி – 623 409 மொத்த விநியோகையாளர்: மூன் பப்ளிகேஷன்ஸ், 83/3, மூர் தெரு, முதல் மாடி, மண்ணாடி, சென்னை – 600 001 தொலைபேசி: 65690810 விலை: ₹14.00 இது ஒரு இஸ்லாமிய தகவல் சார்ந்த தமிழ் நூலாகும். முன்னுரை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலக வாழ்க்கை பல கவர்ச்சிகரமான அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. நிலையில்லாத உலக வாழ்க்கையின் இன்பத்தில் மூழ்கி, நிலையான மறுமை வாழ்க்கையை பலர் மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் நன்மையான காரியங்களை விட்டு விலகிச் செல்வதோடு, தீமையின்பால் விரைந்து கொண்டிருக்கிறார்கள். நல்லவர்களாக வாழ நினைப்பவர்களும் தீமைகளை அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இறையச்சத்தை நினைவூட்டும் காரியங்களை அறிந்து கொள்ளாததால் இத்தகைய நிலை இவர்களிடத்தில் நீடிக்கிறது. தடம் புரண்டுவிடாமல் வெற்றிக்கான வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், மரணத்தையும் அதற்குப் பின்னால் இருக்கின்ற வாழ்க்கையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தவறான ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி (2229)

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…