தேர்ந்தெடுக்கப்பட்ட 70 நபிமொழிகள் பகுதி 3 — front cover

தேர்ந்தெடுக்கப்பட்ட 70 நபிமொழிகள் பகுதி 3

ஆசிரியர்: கலாநிதி முஹம்மத் முர்தழா ஆஇஷ்

தேர்ந்தெடுக்கப்பட்ட 70 நபிமொழிகள் - பகுதி 3   1435-2014   அறிவிப்பாளர் பற்றி சிறுகுறிப்பு   சிறு விளக்கங்களுடன்   எழுதியவர்: கலாநிதி முஹம்மத் முர்தழா ஆஇஷ்  தமிழில்: எம். அஹ்மத் (அப்பாஸி)   مختارات من السنة النبوية   الجزء الثالث لعام ١٤٣٥هـ   போட்டி ஏற்பாடு: சனசமூக மற்றும் அழைப்புப் பிரிவு , ரப்வா,  இஸ்லாமிய அழைப்பு நிலையம் - ரியாத், சவூதி அரேபியா   முன்னுரை   அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.   தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக அனுப்பியருளிய வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும்.   நபிமார்களுக்கெல்லாம் முத்திரையான எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர், கிளையார், மறுமை வரை அவர்களைப் பின்பற்றும் அனைவரும் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.   இஸ்லாம் ஈருலக ஈடேற்றத்திற்குரிய மார்க்கமாகும். எனவேதான் அது மக்களுக்கு தனிமனித, குடும்ப, சமூக, மார்க்க அடிப்படையிலான வாழ்விற்கு வெற்றிப்பாதைகளை தெளிவுபடுத்துகிறது. எனவே மனித சமூகங்களில் அநீதி, அத்துமீறல், வெறுப்பு போன்றவற்றிற்கு அது இடமளிக்காது.   தற்காலத்தில் உலகை ஆட்டிப்படைக்கும் (அனைத்து) மனித சீர்கேடுகளும் தூய இஸ்லாத்தின் உயிரோட்டத்திலிருந்து தூரமாகியதன் வெளிப்பாடுகளே. அதன் காரணமாக, கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மத் பின் அப்தில்லாஹ் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்த மார்க்கத்தை யதார்த்தமாகப் பற்றிப் பிடிப்பதின்பால் (உங்களை) நாம் அழைக்கிறோம்.   உண்மையாகவும் உளத்தூய்மையுடனும் நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தி நேசிப்பதுடன் அவர்களை பின்பற்றுவதற்காக, அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொன

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…