தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள் பகுதி 1 — front cover

தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள் பகுதி 1

ஆசிரியர்: கலாநிதி முஹம்மத் முர்தழா ஆஇஷ்

தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள் பகுதி 1 முதலாவது ஹதீஸ் மனனப் போட்டி   ஹிஜ்ரி 1433ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்   அறிவிப்பாளர் பற்றி சிறுகுறிப்பு சிறு விளக்கங்களுடன்   எழுதியவர்: கலாநிதி முஹம்மத் முர்தழா ஆஇஷ்  தமிழில்: எம். அஹ்மத் (அப்பாஸி)   مسابقة السنة النبوية الأولى للجاليات 1433   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.   அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். பயபக்தியுள்ளவர்களுக்கே நல்ல முடிவு இருக்கின்றது. சாந்தியும் சமாதானமும் நபிமார்கள், ரஸூல்மார்கள் அனைவருக்கும் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் கிளையார் தோழர்கள், இறுதிநாள் வரை அவர்களைப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக.   அல்குர்ஆனுக்கடுத்ததாக இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம் நபிகளாரின் வழிமுறை எனப்படும் சுன்னாவாகும். இதனால் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் இந்த சுன்னாவின்பால் அக்கறை செலுத்துவது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.   இந்த சுன்னாவை மனனமிடுவதிலும், அதன் சட்டங்களை அறிவதிலும், நாளாந்த வாழ்கையில் அதனைக் கடைபிடிப்பதிலும் போட்டிகள் வைப்பதன் மூலம் மக்களிடையே (சுன்னாவைப்) பரவச்செய்வது அதன்பால் அக்கறை கொள்வதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். ஏனெனில் (இது போன்ற) அறிவியல் போட்டிகளின் மூலம் பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் அழைப்புப்பணி மேற்கொள்ளும் போது பெரிய சாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன.   மேலும் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுவதனால், அல்லாஹ்வினுடைய உத்தரவால் - பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையே சுன்னாவினுடனான ஆழமான தொடர்பினை உருவாக்க முடிகின்றது.   எனவே (ரப்வா தஃவா நிலையத்தின்

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…