சுபிட்சமான வாழ்விற்கு பயனுள்ள வழிகள் — front cover

சுபிட்சமான வாழ்விற்கு பயனுள்ள வழிகள்

ஆசிரியர்: அஷ்ஷேஹ் அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் அஸ் ஸஅதீ (ரஹ்)

சுபிட்சமான வாழ்விற்கு பயனுள்ள வழிகள் மூலம்: அஷ்ஷேஹ் அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் அஸ்-ஸஅதீ (ரஹ்) தமிழில் : முஹம்மத் ஹுஸைன் அபூதாஹிர் வெளியீடு: பிரசுரிப்பு, அறிவியல் ஆய்வுத் திணைக்களம் இஸ்லாமிய அழைப்பு வழி காட்டல், வக்பு, அலுவல்கள் அமைச்சு 1435 H ஹிஜ்ரி சுபிட்சமான வாழ்விற்கு பயனுள்ள வழிகள் بسم الله الرحمن الرحيم நூலாசிரியரைப்பற்றி... நமது கரங்களில் தவழும் இச்சிறு நூல் உண் மையான ஈடேற்றத்திற்குரிய அடிச்சுவடுகளை முன் வைக்கிறது. அந்த ஈடேற்றமே மனிதன் முயற்சித்துத் தேடும் விடயமாகும். அந்த சுபிட்சம் தான் திருமறையின் ஆதாரங்கள், நபிவழியின் வழிகாட்டல்களினாலான அடிச்சுவடுகளின் அடையாளத்திலே உறுதி செய்யப்பட்டதுமாகும். அதுதான் ஒரு முஃமின் ஆதரவு வைக்கும் சுபிட்சமும், ஈமானிய சமூகம் வாழும் சுபிட்சமுமாகும். ஏனெனில் அந்த ஈடேற்றம் மட்டுமே மூமினின் வாழ்வினில் அவனது பாதையை அல்லாஹ்வின் அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் ஒருங்கே அமையச் செய்யும் ஒரே வழியாகும். இச்சிறு நூலை உங்களுக்காக சங்கைக்குரிய அல்லாமா அஷ்ஷைக் அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் பின் அப்துல்லாஹ் அஸ்ஸஅதீ (ரஹ்) அவர்கள் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். இவர்கள் சவூதி அரேபியாவில் நஜ்த் தேசத்தில் கஸீம் மாகாணத் தின் உனைஸா எனும் நகரிலே பிறந்தார்கள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தாலும் அறிவு. மதிநுட்பத்திலும் கல்வியைத் தேடுவதிலும் சிறந்தவராக விளங்கினார்கள். தன் பால்ய வயதிலேயே மாமறை திருக்குர்ஆனை மனனமிடத் துவங்கி தனது பன்னிரண்டாவது வயதிலேயே அதை முழுமை செய்தார்கள். பின்பு மார்க்கக் கல்வியைக் கற்கத் துவங்கினார்கள். தனது ஊரிலுள்ள அறிஞர்களிடம் மட்டுமின்றி பிற பகுதிகளிலிருந்து வந்த சிறந்த மார்க்க அறிஞர்களிடமும் தேவையான கல்வியைக் கற்றுக் கொண்டார்கள்.

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…