நபி ﷺ அவர்களின் குணாதிசியங்கள்
நபி ﷺ அவர்களின் குணாதிசியங்கள் ஆசிரியர்: முஹம்மது ஜமீல் ஜைனு (ரஹிமஹுல்லாஹ்) தமிழாக்கம்: ஷைய்க் முஹம்மது இக்பால் மதனீ (ஓய்பு பெற்ற அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையம், துபாய், சவுதி அரேபியாவிலுள்ள இஸ்லாமிய காரியங்கள் பற்றிய மந்திரி துறையின் துபாய் அழைப்பாளர்.) புத்தக விவரத் தொகுப்பு நூலின் பெயர்: நபி அவர்களின் குணாதிசியங்கள் மூலமொழி: அரபி நூலாசிரியர்: முஹம்மது ஜமீல் ஜைனு (ரஹிமஹுல்லாஹ்) தமிழாக்கம்: முஹம்மது இக்பால் மதனீ இரண்டாம் பதிப்பு: ஜூலை - 2014 நூலின் அளவு: டெம்மி 1/8 பக்கங்கள்: 144 வெளியிட்டோர்: எஸ்.ஏ.ஆர். டிரஸ்ட் 43, டி-ஏ, தர்மலிங்கம் தெரு, கீரைத் தோட்டம், மணப்பாறை - 621306. முன்னுரை அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் துவங்குகின்றேன். நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம், அவனிடமே உதவி தேடுகிறோம், அவனிடத்தே (பாவங்களை) பொருத்தருள வேண்டுகிறோம். நம்முடைய மனங்களின் தீமைகளிலிருந்தும், நம்முடைய செயல்களில் தீயவைகளிலிருந்தும் அல்லாஹ்விடமே பாதுகாக்கத் தேடுகிறோம். அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகிறானோ, அவனை வழிகெடுப்பவர் (எவரும்) இல்லை. இன்னும், அவன் நேர்வழி செலுத்தாதவருக்கு நேர்வழி காட்டுபவரும் இல்லை. மேலும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் எதுவும் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை என்று நான் சாட்சிகூறுகிறேன். நிச்சயமாக, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியார் மற்றும் தூதர் எனவும் சாட்சி கூறுகிறேன். (அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுடைய நபியின் மீது ஸலவாத் கூறியதற்குப் பிறகு:) “ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணாதிசயங்கள்,
Loading comments…