உலக முடிவு இறுதி நாளின் சிறிய, பெரிய அடையாளங்கள்
نهاية العالم உலக முடிவு | இறுதி நாளின் சிறிய, பெரிய அடையாளங்கள் அரபியில் : ஷைக் முஹம்மது அல் அரீஃபி தமிழில் : ஷைக் ஆர். நுவீஸ் மக்கி மேலாய்வு : அ. உமர் ஷரீஃப் உள்ளே ... 1. மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றிப் பேசத்தான் வேண்டுமா?............. 2. மறுமை நாளின் அடையாளங்கள் பற்றிப் பேசுகின்றபோது கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள்...... 3. அன்றாட நிகழ்வுகளும் மறுமைநாளின் அடையாளங்கள் பற்றிய வசனங்களும். 4. மறுமை நாளின் அடையாளங்கள் என்றால் என்ன? 5. மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் 6. மறுமை நாளின் பெரிய அடையாளங்கள். 1. தஜ்ஜால். 2. ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வருகை!. 3. யஃஜூஜ், மஃஜூஜ். 4, 5, 6. மூன்று பெரும் பூகம்பங்கள் 7. புகை மூட்டம். 8. பேசும் இராட்சத பிராணி. 9. சூரியன் மேற்கில் உதித்தல். 10. மஹ்ஷரின் பக்கம் மக்களை ஒன்று திரட்டுகின்ற நெருப்பு பதிப்புரை எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! ஸலவாத்தும் ஸலாமும் தூதர் மீதும், தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவுக! உலக முடிவு நாளின் அடையாளங்களைப் பற்றி ஷைக் முஹம்மது அல் அரீஃபி அவர்கள் எழுதிய -நிஹாயதுல் ஆலம் (உலக முடிவு) என்ற நூலின் தமிழாக்கத்தை வெளியிடுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். இந்நூலின் மூல ஆசிரியர் அல் அரீஃபி அவர்கள் அரபுலகில் பிரபலமான ஒரு பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார். 'ஸலஃப் மன்ஹஜ்' ஐ பின்பற்றக்கூடிய நம்போன்றவர்களுக்கு அவருடன் பல விசயங்களில் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் இந்த நூலும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களும் குர்ஆன், ஹதீஸ் மற்றும் "ஸலஃப் மன்ஹஜ்'க்கு உட்பட்டவையாக இருக்கின்ற காரணத்தினால் இந்நூலின் தமிழாக்கத்தை வெளியிடுவதில் இன் ஷா அல்லாஹ் குற்றம் ஏதும் இருக்காது என்று கருதுகிறோம். அஷ்ஷைக் ஆர். நுவைஸ் ம
Loading comments…