பதவி மோகம் 253 — front cover

பதவி மோகம் 253

ஆசிரியர்: எஸ். அப்துல் வஹ்ஹாப்

பதவிமோகம் முன்னுரை தத்துவப் பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் இந்நூலைத் தத்துவ நூல் என்றே கூறிவிடலாம். மதவியல் கருத்துக்களை த்தத்துவ முறையிலும் விளக்க முடியும் என்பதை இமாமவர்கள் நிரூபித்துக் காட்டுகிறார்கள். இமாமவர்கள் பதவியைப் பற்றியும் முகஸ்துதியைப் பற்றியும் நீண்ட இரு அத்தியாயங்கள் எழுதியிருக்கிருர்கள். முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம் "பதவிமோகம்’ என்ற பெயருடன் தங்கள் கரத்திலிருக்கிறது.  பதவி, முகஸ்துதி ஆகிய வெவ்வேருன இரு தலைப்புக்களை ஒரே நூலில் அவர்கள் இணைத்துவிட்டதால், இந்த நூலின் ஆரம்பத்தில் முகஸ்துதி யைப் பற்றியும் சிறிதளவு விளக்கம் தந்திருக்கிருர்கள். "பதவி” என்ற வார்த்தை "உத்தியோகம்" என்ற கருத் தில் உபயோகிக்கப்புட்டாலும், இமாமவர்கள் அதற்கு அப்படிப் பொருள் கொடுக்கவில்லை. 'பொருளை உடைமையாக் கிக்கொண்டு அதன்மீது உரிமையை நிலை நாட்டும்போது அதைச் செல்வநிலை" என்று குறிப்பிடுகிருேம்.  மக்களின் உள்ளங்களை வசப்படுத்திக்கொண்டு அவற்றின்மீது அதிகாரம் செலுத்தும்போது அதைப் "பதவி" என்று குறிப்பிடுகிருேம்' என்று விளக்கம் தருகிருர்கள். இந்த நூலில் இமாமவர்கள், குறிப்பிட்ட சில இடங்களில் மிகவும் நுண்ணிய பல கருத்துக்களை வெளியிட்டிருக்கிருர்கள்.  இதுபோன்ற இடங்களில் அடியேனால் இயன்ற அளவிற்குத் தமிழாக்கத்தைத் தெளிவுடனேயே செய்திருக்கிறேன். இந்த நூலில் "மதிப்பில் ஒரு கண்" என்ற அத்தியாயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.  அதில் இமாமவர்கள், 'மனிதன் தேவைக்கதிகமாகப் பொருளையும் மதிப்பையும் ஏன் விரும்புகிருன்?" என்ற வினாவைவை உண்டாக்கி, அதற்கு விடையும் தருகிருர்கள். இந்தப் பகுதி, ஊன்றி “ கவனித்துப் படிக்க வேண்டிய பகுதி. எளிதில் உணர்ந்து கொள்ளத் தகுந்த மற்றக் கருத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…