உடலுறவு இஸ்லாமிய கையேடு
உடலுறவு இஸ்லாமியக் கையேடு முஹம்மது இப்னு ஆதம் அல்-கவ்ஸரி தமிழாக்கம் : புன்யாமீன் மாற்றுப் பிரதிகள் முதல் பதிப்பு 2009 © முஹம்மது இப்னு ஆதம் அல்-கவ்ஸரி © தமிழாக்கம்: மாற்றுப்பிரதிகள் வெளியீடு: மாற்றுப் பிரதிகள் விற்பனை உரிமை: த பாபிரஸ், 1204 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310. திருச்சி மாவட்டம், இந்தியா. தொலைபேசி: 04332 273444. நூல் வடிவம்: த பாபிரஸ், அச்சாக்கம்: அடையாளம் பிரஸ், இந்தியா. ISBN 97881 908551 81 விலை: 120 இலங்கையில் விநியோகர்: தார் அல்-இஹ்ஸான் வெளியீடு, காத்தான்குடி, இலங்கை மின்னஞ்சல்: daralihsandotcom@gmail.com udaluravu: islaamiyak kaiyedu is the Tamil translation of Islamic Guide to Sexual Relations in English by Muhammad Ibn Adam Al-Kawthari, First edition: 2009, Published by Maatrup Pirathikal. email: maatruppirathikal@gmail.com நூலாசிரியர் பற்றி முஃப்தி முஹம்மத் இப்னு ஆதம் அல்-கவ்ஸரி, மரபுரீதியாகப் பயிற்று விக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர். உலகின் பல்வேறு இடங்களில் கல்வி பெற்றவர். இங்கிலாந்திலுள்ள லெய்ஸ்டரில் பிறந்து, தம்முடைய முன்மாதிரித் தந்தை ஷெய்கு மெளலானா ஆதமின் வழிகாட்டுதலில்வளர்ந்தவர். அவர் மிக இளம் வயதிலேயே இஸ்லாம்குறித்து கற்கத் தொடங்கி, ஒன்பது வயதில் குர்ஆனை மனனம் செய்தார். முதலில், இங்கிலாந்தில் பெரியிலுள்ள தாருல் உலூமில் அரபு மொழியும் பல்வேறு மரபுரீதியான இஸ்லாமிய அறிவியல்களையும் படித்தார். அவருடைய ஆசிரியர்கள் பலருள் முக்கியமாகக் குறிப்பிடப்படுபவர், ஷெய்கு முஹம்மது யூசுஃப் முதாலா. மேலும், கவ்ஸரி முதன்மையான ஆறு நபிமொழித் தொகுப்புகள் உட்பட பல்வேறு நூல்களில் பாடஅதிகாரத்துவம் (இஜாஸா) பெற்றார். தாருல் உலூமில் பட்டம் பெற்றபின், அவர் பாகிஸ்தானில
Loading comments…