உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது அறுத்துப் பலியிட வேண்டும் — front cover

உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது அறுத்துப் பலியிட வேண்டும்

ஆசிரியர்: அல்ஹாபிழ் இன்திகாப் உமரீ

உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது அறுத்துப் பலியிட வேண்டும்? அல்ஹாபிழ் இன்திகாப் உமரீ உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது வரை அறுத்துப் பலியிடலாம் என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் அன்று முதல் கருத்து முரண்பாடுகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஈதுல் அழ்ஹா தினத்திலும் அதைத் தொடர்ந்தும் வரும் இரண்டு நாட்களிலும் அறுத்துப் பலியிட வேண்டும் என்கின்றார். இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் துல்ஹஜ் பிறை 10, 11, 12, 13 ஆகிய தினங்களில் அறுத்துப் பலியிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஸிரீன் (ரஹ்) அவர்கள் யவ்முன் நஹ்ர் உழ்ஹிய்யாப் பிராணியைப் பலியிட வேண்டும் என்கின்றார். மற்றும் சிலர் துல்ஹஜ் பிறை 10 முதல் இறுதிவரை உழ்ஹிய்யா வழங்கலாம் என்று கூறுகின்றார்கள். இது அல்லாத வேறு கருத்துக்களும் இருக்கின்றது. இவற்றில் அல்குர்ஆன், சுன்னாவுக்கு மிக நெருக்கமான கருத்து எது என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அலசுவோம். இந்தக் கட்டுரையில்... உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது பலியிடுவது ஏற்றமானது? என்ற தகவலையும், உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது வரை நாம் அறுத்துப் பலியிடலாம்? என்ற கருத்தையும் ஆதாரங்கள் அடிப்படையில் விரிவாகப் பார்க்கலாம். எந்த ஒரு அமலை நாம் நிறைவேற்றும் போதும் அந்த அமலை எப்போது, எப்படிச் செய்வது என்ற அறிவு எங்களிடம் இருப்பது அவசியமாகும். அந்த அறிவு இல்லாமல் நாம் ஒரு அமலை நிறைவேற்றும் போது பல நன்மைகளை தவறவிட்டுவிடுவோம். சில வேளையில் முழு நன்மைகளையும் தவறவிடும் நிலைகளும் ஏற்பட்டு விடலாம்.

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…