இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் — front cover

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

ஆசிரியர்: அஷ்ஷைக் எம். ஜே. எம் . ரிஸ்வான் (மதனி)

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் அஷ்ஷைக்: எம். ஜே. எம் . ரிஸ்வான் (மதனி) நுழைவாயில்......... புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும் நமது தூதரும், வழிகாட்டியுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், மற்றும் நல்லடியார் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! வழிகெட்ட பிரிவுகளின் வருகை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் சீர்குலைக்கும் அனைத்து வழிகெட்ட பிரிவுகளின் தோற்றம், வருகை பற்றி ஆய்வு செய்தால் அவை ஒவ்வொன்றும் குர்ஆனின் வசனங்களையும், நபிமொழிகளையும் தமது சித்தாந்தங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் ஆதாரங்களாக சித்தரித்துக் கொண்டு முளைத்திருப்பதையும், பிரச்சாரம் செய்திருப்பதையும் பார்க்கின்றோம். இவற்றின் பின்னணியில் யூதக்கும்பலின் மறைமுகமான சதி இருந்தே வந்திருக்கின்றது என்பது வெள்ளிடை மலை. இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்'  என்ற தலைப்பில் முன்வைக்கப்படும் இந்த ஆய்வில் அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகளில் "அஸ்மா, வஸ்ஸிபாத்தை' திரித்தும், பொருள் மாற்றம் செய்தும், மறுத்தும் கூறும் 'ஜஹ்மிய்யா' சிந்தனைத் தாக்கம் பெற்ற அஷ்அரிய்யா என்ற பிரிவினர், கப்ரு வணங்கிகள், ஹவாரிஜ்கள், ஷீஆக்கள், காதியானிகள், போராக்கள், ஆகிய பிரிவுகள் பற்றியும், இஸ்லாமியக் கொள்கையில் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றியும் கூற இருக்கின்றோம். இஸ்லாமிய வரலாற்றின் வழிகெட்ட பிரிவுகளின் தரப்படுத்தல் வரிசையில் "முதலாவதாக ஹவாரிஜ்கள், அதன் பின்னர் ராபிழாக்கள் எனப்படும் ஷீஆக்கள், பின்னர் அலி (ரழி) அவர்களைக் குறைகாணும் 'நவாஸிப்கள்', அதன் பின்னர் 'கத்ரிய்யா', ஜப்ரிய்யா, முஃதஸிலா, ஜஹ்மிய்யா, ஆகிய பிரிவுகள் இஸ்லாமிய ஆய்வாளர்கள் மூலம் தரப்படுத்துவதைப்

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…