அல்குர்ஆன், சுன்னாவின் ஒளியில் நபித்தோழர்கள்
அல்குர்ஆன், சுன்னாவின் ஒளியில் நபித்தோழர்கள் ஆசிரியர்: அஷ்ஷெய்க் அப்துல் முஹ்சின் பின் ஹமத் அல்அப்பாத் அல்பதர் தமிழில்: ஹசன் அலீ உமரீ AL-QURAAN, SUNNAVIN OLIYIL NABITHTHOZHARGAL AUTHOR: Asshaik Abdul Muhsin bin Hamad Al-Abbaad Al-Badar FREE DISTRIBUTION IBNUL QAYYIM ISLAMIC RESEARCH & GUIDANCE CENTRE (IRGC) 39, Gowdiya Mutt Road, Royapettah, Chennai - 600 014, India. Phone: +91-44-28133750 irgc1999@gmail.com / www.irgc.net நுழையும் முன்... அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரின் உறவினர், உத்தமத் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக! அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களுக்குப் பிறகு ஆதமின் சந்ததிகளிலேயே சிறந்த அந்தஸ்தைப் பெற்றவர்கள் ஸஹாபாக்கள் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அல்லாஹ் அந்த மேன்மையாளர்களுக்கு நபி அவர்களின் தோழமையைப் பெறுவதற்கான பாக்கியத்தை வழங்கியுள்ளான். நபி அவர்களிடமிருந்து நேரடியாக மார்க்கத்தைக் கற்று அதன்படி நடப்பதற்கான அருளையும் அவர்களுக்குக் கொடுத்துள்ளான். மேலும் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவை தமக்குப் பின்னால் வரும் மக்களுக்குத் தெரிவிக்கும் சாட்சியாளர்களாகவும் அவர்களை ஆக்கியுள்ளான். இந்த சாட்சியாளர்கள் தொடர்பாக ஒவ்வொரு முஸ்லிமும் தன் உள்ளத்தில் நல்லெண்ணம் கொள்ள வேண்டும். ஸஹாபாக்களைக் குறை கூறுவதும், அவர்கள் மீது தவறான எண்ணம் கொள்வதும், அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் மீதே தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடும். அல்குர்ஆன், சுன்னாவின் ஒளியில் நபித்தோழர்கள் இதுபற்றி ஹதீஸ் கலையின் இமாமும், இமாம் ம
Loading comments…