இமாம் மாலிக் (றஹ்) அவர்களின் கல்விப் பயணமும் முவத்தா கிரந்தமும் — front cover

இமாம் மாலிக் (றஹ்) அவர்களின் கல்விப் பயணமும் முவத்தா கிரந்தமும்

ஆசிரியர்: M.J.M RIZWAN MADANI

இமாம் மாலிக் (றஹ்) அவர்களின் கல்விப் பயணமும் முவத்தா கிரந்தமும் M.J.M RIZWAN MADANI BA (Hons) Faculty of Noble Hadees & Islamic Studies, Islamic University of Madina - KSA, MA, Faculty of Arabic & Islamic Civilization, University of Peradeniya - Sri Lanka كتبه العبد الفقير محمد رضوان بن جنيد خريج كلية الحديث الشريف والدراسات الإسلامية بالجامعة الإسلامية بالمدينة المنورة முன்னுரை அவனது புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. பேரருளும் சாந்தியும் இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களின் வழி நடந்த அனைத்துலக முஸ்லிம்கள் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! இறைத்தூதரின் நேரடி மாணவர்களான நபித்தோழர்களிடம் பாடம் படித்த தாபியீன்களின் வழி வந்தோரிடம் ஷரீஆவைத் துறைபோகக் கற்றுத் தேறியவர்களில் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஒருவராகும். ஹதீஸ்கள் வாயிலாக ஃபிக்ஹ் விளக்கத்தை "முவத்தா" எனும் கிரந்தத்தை முதன் முதலில் தொகுத்தளித்ததன் ஊடாக ம் ஹதீஸ்கள் ஊடாக பெறப்படும் ஃபிக்ஹ் விளக்க வழிமுறை தொடர்பாக வழிகாட்டிய முன்னோடிகளில் ஒருவராக இமாம் மாலிக் ரஹி அவர்கள் கணிக்கப்படுகின்றார்கள் இமாம் மாலிக் ரஹி அவர்கள் பிரசித்திபெற்ற நான்கு மத்ஹபுகளில் ஒன்றான மத்ஹப் மாலிக்கீ மத்ஹபின் நிருவனராக நோக்கப்படுவதை நாம் அறிவோம். இமாம் மாலிக் (ரஹி) அவர்களின் மாணவரான இமாம் ஷாஃபிஈ அவர்கள் அல் உம்மு என்ற தனது நூலுக்கு இமாம் மாலிகின் முன்னோடி நூலாக கொண்டதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அப்படியான சிறப்பு மிக்க ஒரு இமாமின் வாழ்க்கை, வரலாறு கல்வித்தேடல் பற்றி இங்கு சுருக்கமாக நோக்க உள்ளோம். இமாம் மாலிக்கின் குட

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…