இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (வாழ்க்கை வரலாறு) ஆசிரியர் அஹமது பின்ஹஜர் (கதர் அரசாங்க நீதிபதி) الشيخ محمدبن عبدالوهاب عقيدته السلفيّة ودعوته الإصلاحيةوثناءالعلماء عليه بقلم العلامة الشيخ احمدبن حجربن محمد ال أبوطامی )قاضي المحكمةالشرعيةبقطر( قدم له ومحمد سماحةالشيخ عبدالعزيز بن عبد اللهالباش نقله إلى التاملية کمال الدین بن شاہ الحمید இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(வாழ்க்கை வரலாறு) ஆசிரியர் : அஹமது பின் ஹஜர்(கதர் அரசாங்க நீதிபதி) தமிழாக்கம் : மௌலவி S. கமாலுத்தீன் இஸ்லாமிய பல்கலைக் கழகம் மதீனா முதற் பதிப்பு : மார்ச் 1979 அச்சிட்டோர் : திரீயெம் பிரிண்டர்ஸ் 92, அரண்மனைக்காரத் தெரு, சென்னை- 600001. அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்கள் முகவுரை எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே; இறைவன் ஒவ்வொரு காலத்திலும் நேரான பாதையில் மக்களை அழைக்கின்ற சீரிய தலைவர்களை உருவாக்கி நம்மீது அருள் புரிந்தான். இவர்கள் மக்களை உண்மையான பாதையின் பால் அழைத்து கண்ணிருந்தும் பார்வையற்றவர்கள் போலிருந்தவர்களுக்கு திருக்குர் ஆன் என்னும் தெய்வீக கிரந்தத்தால் ஞான ஒளி யூட்டினார்கள். இறைபாதையில் ஏற்படுகின்ற இன்னல்களை பொறுத்து, குர்ஆன், ஹதீஸை எதிர்க்கின்றவர்களை அடி யோடு இல்லாமலாக்கினார்கள். திருக்குர் ஆனிற்கு அறிவீனர் கள், வழிகெட்டவர்கள் உண்டாக்கிய மாற்றுப் பதங்களையும் மாற்றுப்பொருள்களையும் எதிர்த்தார்கள். மார்க்கத்தின் உண்மைகளை மக்களுக்கு விளக்கி, அவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களுக்குத் தெளிவான, உறுதியான ஆதாரங்களை எடுத்துக்காட்டிச் செயல்பட்டுவந்தார்கள். ஹிஜ்ரீ பன்னிரண்டாம் நூற்றாண்டில் அழிந்துபோன இஸ்லாமியச் சின்னங்களை புதுப்பிக்க வந்த மேதை, மார்க்கஞானி முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்பின் சுலைமான்
Loading comments…