முஸ்லிம் சிறார்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள்
முஸ்லிம் சிறார்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் ISLAMHOUSE.com Tel: +966 50 244 7000 info@islamiccontent.org Riyadh 13245-2836 www.islamhouse.com அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன். முன்னுரை அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன், புகழனைத்தும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாம் பற்றி முஸ்லிம் சிறார்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய பாடங்கள் பற்றியே இந்நூல் அலசுகிறது. இவற்றை பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே தமது பிள்ளைகளுக்கு கற்பித்துக்கொடுப்பது கடமையும் அவசியமுமாகும். இந்நூலானது அகீதா (நம்பிக்கை), பிக்கஹ் (சட்டம்), ஸீரா (நபிகளின் வரலாறு), ஒழுக்கம், அல்குர்ஆன் விளக்கவுரை (தப்ஸீர்), ஹதீஸ், பண்பாடுகள் மற்றும் அஸ்கார் (சந்தர்ப்ப துஆக்கள்) ஆகிய தலைப்புகளினால் ஒருங்கிணைக்கப்பட்டு தொகுக்கப்பட்ட எளிதானதும் இலகுவானதுமான ஒரு பாடத்திட்டமாகும். இது சிறுவர்கள் மற்றும் வயது வேறுபாடின்று அனைவருக்கும் ஏற்றது. முக்கியமாக புதிதாக இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டோருக்கும் மிகவும் பயன்மிக்கது. அத்துடன் வீடுகளிலும், முன்பள்ளிகளிலும் மற்றும் கற்பித்தல் நிறுவனங்களிலும் மனனமிடுவதற்கும் இஸ்லாம் பற்றிய தெளிவை பெறுவதற்கும் பொருத்தமான ஒரு நூலாக கொள்ள முடியும். இந்நூலை இஸ்லாமிய கலைகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தியுள்ளேன். மிக இலகுவான முறையில் சிந்தித்து விளங்கி மனதில் பதியச் செய்வதற்கு ஏற்றவிதத்தில் கேள்வி-பதில் முறையில் தகவல்களை அமைத்துள்ளேன். கற்பித்தலாளர்கள் மற்றும் பயிற்றுவிப்போர், மாணவர்களின் வயதுக்கு ஏற்றதை இதிலிருந்து தெரிவு செய்து கற்பிக்க முடியும். அல்லாஹ் இம்முயற்சியை பயனுள்ளதாக்கி இப்பணியை
Loading comments…