அர்பஊன் நவவீ 40 ஹதீஸ்கள் வகுப்பு
ஆறு மாத இஸ்லாமிய கல்வி அர்பஊன் நவவீ 40 ஹதீஸ்கள் வகுப்பு ஆசிரியர்: அஷ்ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி அறிமுகம் - விபரங்கள் மற்றும் விதிமுறைகள். கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்.. அர்பஊன் நவவீ 40 ஹதீஸ்கள் வகுப்பு - ஹதீஸ் 1 - 42 முன்னுரை இப்பாடத்தில் சிறு ஹதீது தொகுப்புகளைக் காண்போம். ஹதீதுக் கலை வல்லுநர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஹதீதுகளைப் பல்வேறு விதமாகத் தொகுத்துள்ளார்கள். உதாரணமாக, அபு ஹுரையாராஹ் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்த ஹதீதுத் தொகுப்பு, அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீதுத் தொகுப்பு இப்படி தொகுத்துள்ளார்கள். இவற்றை முஸ்னத் என்பார்கள். சிலர் ஸஹீஹான ஹதீதுகளின் தொகுப்புகளைக் கொடுத்துள்ளனர். இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தொகுத்தது இதற்கு உதாரணம் ஆகும். இது போல இமாம் யஹ்யா இப்னு ஸரஃப் அந் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தொகுத்த 40 ஹதீதுகளை இங்கு காண்போம். இது போல அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்ற வேறு பல அறிஞர்களும் 40 ஹதீதுகளை தொகுத்துள்ளார்கள்., இவர்களின் ஹதீது மிகவும் பிரபலமானது. 40 ஹதீதுகள் என்ற எண்ணிக்கைக்குக் காரணம், "எவர் ஒருவர் எனது உம்மத்துக்காக 40 ஹதீதுகளைத் தொகுத்து அளிப்பாரோ, அவருக்கு அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா ஷஹீது நன்மையை அளிப்பான்” என்ற ஹதீது தான். மற்றொரு அறிவிப்புகளின்படி அறிஞராக எழுப்புவான் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் அனைத்தும் பலவீனமானவை. இந்தத் தொகுப்பு உம்மத்துக்குப் பயன்தரும் முக்கியமான ஹதீதுகளைக் கொண்டுள்ளது. இதில் 42 ஹதீதுகள் உள்ளன. இமாம் யஹ்யா இப்னு ஸரஃப் அந் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தந்தையின் பெயர் ஸரஃப் ஆகும். இமாம் நவவியில் பிறந்தவர் ஆவார். சிறு வயதிலிருந்தே மார்க்கக் கல்வ
Loading comments…