சிலந்தி வலையில் சிந்தனைக் கூடு 250 — front cover

சிலந்தி வலையில் சிந்தனைக் கூடு 250

ஆசிரியர்: ஆர். பி. எம். கனி

சிலந்தி வலையில் சிந்தனைக் கூடு (முஹம்மது நபி صلى الله عليه وسلم  வாழ்கைக்குறிப்பு) முன்னுரை நமது இருலோக தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய தோழர்கள், கிளையார்கள். அவர்கள் வழியொற்றி நடந்தோர் அனைவர் மீதும் அல்லாஹுத் தஆலாவின் ஆசியுண்டாவதாக எம்பெருமானாரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. நாம் நூல்கள் வெளியிடும் அடிப் படையில் பெருமானாரைப்பற்றியும் நூல் ஒன்று வெளியாக்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதன் பயனால் உருவானதுதான் சிலந்தி வலையில் சிந்தனைக் கூடு” மெளலானா ரூமி (ரஹ்) அவர்கள் தங்கள் மஸ்னவீயில் (கிதாப் 1 பாடல்கள் 2046 முதல் 2051 வரை) ஹதீஸ் ஒன்றைக் குறிப்பிட்டுவிட்டு, இவ்விதம் எழுதுகிறார்கள்: ஹதீஸ் விளக்கக்காரர்கள் இந்தத் திரு மொழியின் புற அர்த்தத்தைச் சொன்னார்கள்! அத்துடன் திருப்தியடைந்து விட்டார்கள். இவ்வகையானோர் உயிரைப்பற்றிய ஞான மற்றவர்களாவர். அவர்கள் மலையைக் கண்டனர்; ஆனால் மலையினுள் புதைந்திருந்த தங்கச் சுரங்கத்தைக் காணவில்லை."" புற விஷயங்களில் மட்டும் கவனஞ் செலுத்திவிட்டு அக விஷயங்களை க் கவனியாதவர்களைப் பற்றித் தான் மெளலானா அவர்கள் இவ்விதம் பகர்ந்தார்கள். இந்த நூலை எழுதுங்கால் இந்தப் பாடலின் கருத்து மனத்தோடு ஒட்டிக் கொண்டது. இது நபிபெருமானாருடைய ஜீவிய சரிதை நூலல்ல. எனவே, சரித்திர நூல்களில் வருவது போல் சம்பவங்கள் ஓர் ஒழுங்குமுறையுடன் வரவில்லையே, எத்தனையோ சரித்திரச் சம்பவங்கள் பிரஸ்தாபிக்கப்படவில்லையே என்று யாரும் குறைபடக்கூடாது. இது ரஸூலுல்லாஹ்வின் அகமியத்தை யும், அவர்கள் வாழ்வே ஓர் அற்புதமாக அமைந்ததையும் சுட்டிக்காட்டும் நூலாகும். அத்துடன் இவையாவுமே ஆதாரப்பூர்வமான தகவல்களைக் கொண்டு தொகுக்கப்பட்டவை

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…