200 பொன்னான நபிமொழிகள்
200 பொன்னான நபிமொழிகள் ஆங்கில மூலம் அப்துல் மாலிக் முஜாஹித் தாருஸ்ஸலாம் பதிப்பகம், ரியாத் - சவூதி அரபியா தமிழில்: எஸ்.யூசுப் ஃபைஜி இமாம் அல்பானீ (ரஹ்) நூலகம், கடையநல்லூர designed by islamkalvi.com Media Team وَمَا أَتْكُمُ الرَّسُوْلُ فَخُذُوهُ وَمَا نَهْكُمْ عَنْهُ فَانْتَهُوا இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனைவிட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள். ஸூரத்துல் ஹஷ்ர் : 7 மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப்புகழும் இறைவனுக்கே! அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்னவனாக ஆரம்பம் செய்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, சகோதரர் தென்காசி எஸ்.ஏ.சித்தீக் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 200 Golden Hadiths from the Messenger of Allah என்ற ஒரு புத்தகத்தை கொடுத்து அதை தமிழ்படுத்தி தாருங்கள் என்று கேட்டார். நானும் அப்புத்தகத்தை பார்வையிட்டேன். மிக அழகான புத்தகம். அதில் உள்ள ஒவ்வொரு ஹதீஸ்களும் முத்து முத்தானவைகள். அதை நீங்கள் படிக்கும் போது உணர்வீர்கள். இப்புத்தகத்தை சில விளக்கங்களுடன் பள்ளிவாசல்களில் காலையிலோ அல்லது மாலையிலோ மக்களுக்கு படித்துக்காட்டலாம். மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதே போன்று, சிறுவர் சிறுமியர் படிக்கும் மக்தப் மதரஸாக்களிலும் அவர்களுக்கு படித்துக் கொடுக்கலாம். அவர்கள் இந்த ஹதீஸ்களை மணணம் செய்யவும் வைக்கலாம். மேலும், பெண்கள் மதரஸாக்களிலும் இப்புத்தகத்தை பாடத்தில் வைக்கலாம். ஏன் சொல்கிறேன் என்றால், இப்புத்தகத்தில் உள்ள செய்திகள் நல்ல கருத்துக்களை வழங்கக்கூடியவை. அவைகள் படித்து அமல் செய்யத்தக்கவைகள். நற்பண்புகள், மனித நேயங்கள் குறைந்து காணப்படும் இக்காலத்த
Loading comments…