இதுதான் தவ்ஹீத் - ஸாலிஹ் அல் பவ்ஸான் — front cover

இதுதான் தவ்ஹீத் - ஸாலிஹ் அல் பவ்ஸான்

ஆசிரியர்: Author: ஸாலிஹ் பின் பவ்ஸான் அல் பவ்ஸான் Translator: எம்.எல் முபாரக் ஸலபி

அகீதா→ ஷிர்க் Tamil 📄 26.9 MB PDF

இதுதான் தவ்ஹீத் - ஸாலிஹ் அல் பவ்ஸான் அரபு மூலம் : கலாநிதி ஸாலிஹ் பின் பவ்ஸான் அல் பவ்ஸான் தமிழ் வடிவம்: எம்.எல் முபாரக் ஸலபி மேலதிக விபரங்களுக்கு: 0532185927 தொடர்பு கொள்ளவேண்டிய நேரம் மாலை 5:00 மணி முதல் 8 : 00 வரை மூல நூலாசிரியரின் முன்னுரை எல்லாப் புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் உண்மை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. இது தவ்ஹீத் கோட்பாடு பற்றி பேசும் ஒரு நூலாகும். இதிலே நான் சுருக்கமாகவும், எளிய நடையிலும் விபரங்களைத் தந்துள்ளேன். இந்நூலை ஆக்க கண்ணிய த்திற்குரிய இமாம்களது நூற்கள் துணை நின்றன. குறிப்பாக, ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, அல்லாமா இப்னுல் கைய்யிம், ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் போன்றோரது நூற்களைக் குறிப்பிடலாம். நமது அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் இஸ்லாமிய அகீதாவைக் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்து அதன்படி அமல் செய்வது அவசியமாகின்றது. நாஸ்தீகம், சூபித்துவம், துறவறம், கப்ரு வணக்கம், பித்அத் மோகம் போன்ற வழிகெட்ட சித்தாந்தங்களும், கொள்கைகளும் மேலோங்கி இருக்கும் இக்காலத்தில் இஸ்லாமிய அகீதாவைக் கசடறக் கற்பது இன்றிய மையாதது. ஏனெனில், ஒரு முஸ்லிம் அல்குர்ஆன், அஸ் சுன்னா அடிப்படையில் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் காட்டித் தந்த அகீதாவை தனது ஆயுதமாகக் கொள்ளாதவரை வழிகேட்டில் இருந்து தப்புவது சாத்தியமற்றது. இதுவே, இஸ்லாமிய அகீதாவை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களிலிருந்து போதிக்கத் தூண்டிய காரணியாகும். ஆசிரியர் மொழிபெயர்த்தோனுரை எல்லாப்புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீது உண்டாவதாக!

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…