தொழுகை நன்மையின் புதையல்கள் — front cover

தொழுகை நன்மையின் புதையல்கள்

ஆசிரியர்: Zulfi Dawah

தொழுகை- நன்மையின் புதையல்கள் அணிந்துரை எல்லாப் புகழும் அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக் கின்ற அல்லாஹ்வுக்கே! இறையருளும் சாந்தியும் இறைத் தூதர்களில் சிறந்தவர் மீது உண்டாகட்டும். தொழுகை இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் இரண்டாவது கடமையாகவும் இஸ்லாத்தினுடைய தூணா கவும் உள்ளது. தொழுகை இறைநம்பிக்கையாளனையும் இறைநிராகரிப்பாளனையும் வேறுபடுத்திக் காட்டும் ஓர் அடையாளமாகும்! "தொழுகையை நிலைநாட்டுங்கள்! இணைவைப் போருடன் சேர்ந்து விடாதீர்கள்." (30:31) "நமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் தொழுகையே! யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் நிராகரித் தவராவார்” என்று நபி (ஸல்) (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற இந்த நபிமொழி அஹ்மத் (5/346), திர்மிதியிலும் (2621) மற்றும் பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. தொழுகையைப் பேணுவதன் மூலமாகத் தான் மனிதன் தனது மார்க்கத்தைக் காத்துக்கொள்கிறான். உமர் (ரலி) அவர்கள் தமது அதிகாரிகளுக்கு பின் வருமாறு கடிதம் எழுதினார்கள்: "உங்கள் காரியங்களில் என்னிடம் மிக முக்கியமானது தொழுகையாகும். யார் அதனைப் பேணி பாதுகாத்துக் கொள்கிறாரோ அவர் தனது மார்க்கத்தைப் பாதுகாத்துக் கொள்வார். விடுகிறாரோ அவர் மற்ற விடுவார்..." இதனை இமாம் யார் அதனைப் பாழ்படுத்தி கடமைகளையும் பாழ்படுத்தி மாலிக் (ரஹ்) அவர்கள் தமது முஅத்தாவில் பதிவு செய்துள்ளார்கள். மேலும் இஸ்லாத்தின் (இறுகப் பற்றிக்கொள்ள வேண்டிய) பிடிமானங்களில் இறுதியாகக் குலைந்துவிடுவது தொழுகை தான். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இஸ்லாத்தின் (இறுகப் பற்றிக் கொள்ள வேண்டிய) பிடிமானங்கள் (பிற்காலத்தில்) ஒவ்வொன்றாக குலைந்துவிடும். ஒன்று குலைந்துவிடும் போது மக்கள் மற்றொன்றைப் பற்றிக் கொள்வார்கள்

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…