சிறுவர்களுக்கான நாற்பது ஹதீஸ்கள் — front cover

சிறுவர்களுக்கான நாற்பது ஹதீஸ்கள்

ஆசிரியர்: அச்சேய்க் முஹம்மத் பின் ஸூலைமான் அல்முஹன்னா (ஸவூதி அரேபியா)

சிறுவர்களுக்கான நாற்பது நபிமொழிகள் தொகுப்பும் விளக்கமும் : அச்சேய்க் முஹம்மத் பின் ஸூலைமான் அல்முஹன்னா (ஸவூதி அரேபியா) மொழிபெயர்ப்பு www.waytojennah.com முன்னுரை எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. உலமாக்கள் நாற்பது ஹதீஸ்களைத் தொகுத்து பல நூல்கள் இயற்றியுள்ளனர். அவற்றில் பிரபல்யமானது. இமாம் நவவி நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலிருந்து நாற்பது ஹதீஸ்களைத் ஒன்றுசேர்த்துத் தெகுத்த “அல்அர்பஊனன் நவவிய்யா" ஆகும். மாணவர்கள் அவற்றைப் பாடமிட்டு, அவற்றின் அர்த்தங்களைப் புரிந்துகொள்வதற்காக அவர்கள் அதைத் தொகுத்தார்கள். இமாம் ஹரவியின் "அல்அர்பஊன் பீ தலாஇலித் தவ்ஹீத்” இமாம் இப்னுல் முபழ்ழலின் “அல்அர்பஊனல் இலாஹிய்யா”, இமாம் இப்னு அஸாகிரின் "அல்அர்பஊனல் புல்தானிய்யா" என்பன இவற்றுள் அடங்கும். இவை தவிர இன்னும் நிறைய நூல்கள் உள்ளன. அல்லாஹ்வுடைய கிருபையின் காரணமாக, எமது பிள்ளைகள் மனனமிட்டு, புரிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறுபட்ட மார்க்கத் தலைப்புகளிலும் உள்ளடங்கும் சிறிய ஹதீஸ்களிலிருந்து நாற்பது ஹதீஸ்களை நான் ஒன்றுசேர்த்துள்ளேன். அதற்கு, 66 “அல்அர்பஊனல் வில்தானிய்யா" (சிறுவர்களுக்கான நாற்பது ஹதீஸ்கள்) எனப் பெயர் சூட்டியுள்ளேன். அவையனைத்தும், இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ஆகியோரின் இரு கிரந்தங்களிலுமோ, ஒன்றிலோ வருபவை. "அல்அர்பஊனல் வில்தானிய்யா" வின் ஒவ்வொரு ஹதீஸையும், சுருக்கமாகவும், முடியுமான அளவு தெளிவாகவும் அர்த்தம் புரியும் விதத்தில் பொதுவான விளக்கியுள்ளேன். அல்லாஹ் அழகான முறையில் இதை ஏற்றுக்கொண்டு, மனனமிடல், கற்றல், தனிமையாக மற்றும் கூட்டாக வாசித்தல், வீடுகளில், ச

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…