ரியாளுஸாலிஹீன்
பதிப்புரை எல்லாப் புகழும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே! சாந்தியும் சமாதானமும் அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும், அவர்களைப் பின் தொடர்ந்து நல் அமல்கள் செய்யும் அனைவரின் மீதும் உண்டாவதாக! மனித சமுதாயம் நேர்வழிபெற்று அதன் மூலம் இவ்வுலக மறு உலக வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது இறைவேதமாகிய அருள்மறை குர்ஆனும், அதன் விளக்கமாக வாழ்ந்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளுமாகும். இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனைவிட்டும் உங்களைத் தடுக்கிறாரோ, அதனை விட்டும் விலகி இருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுந்தண்டனை அளிப்பவனாக இருக்கின்றான். (அல்குர் ஆன் 59:7) என்ற திருமறையின் கட்டளைக்கேற்ப இறைத்தூதர் காட்டிய வழியில் தமது வாழ்க்கையினை அமைத்துக் கொள்வது ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் கட்டாயக் கடமையாகும். அகிலத்தின் அருட்கொடையாய் வந்துதித்த அண்ணலாரின் வாழ்வும் வாக்கும், மனிதர்களை நேர்வழிபடுத்திடும் கலங்கரை விளக்கமாகும். மனித சமுதாயத்திற்காக அவர்கள் அருளிய வாழ்வியல் செய்திகள் பல்லாயிரக் கணக்கானவை. அவற்றில் ஆதாரப்பூர்வ நபிமொழி என ஹதீஸ்கலை அறிஞர்களால் கணிக்கப்பட்டு, 'குதூபுஸ் ஸித்தா' எனும் பெயரில் ஆறு கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை: 1.ஸஹீஹுல் புகாரி 2.ஸஹீஹ் முஸ்லிம் 3. ஸுனன் அபூதாவூத் 4.ஜாமிவுத் திர்மிதீ 5. ஸுனன் அந்-நஸயீ 6.ஸுனன் இப்னுமாஜா இந்த ஆறு நூல்களில் இருந்தும் 1896 நபிமொழிகளை எடுத்து, அவற்றை 372 தலைப்புகளில் தொகுத்து 'ரியாளுஸ் ஸாலிஹீன்' என்ற பெயரில் இமாம் அபூ ஜக்கரிய்யா யஹ்யா பின் ஷரஃப் அந்-நவவீ (ரஹ்) அவர்கள் உலக ம
Loading comments…