ஜனாஸாவுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இம்தியாஸ் யூசுப் ஸலபி ஒருவர் மரணித்தது முதல் அடக்கம் செய்யப்படும்வரை செய்ய வேண்டிய ஒழுங்கு களை -மார்க்ககிரிகைகளை பித்ஆவை விட்டுவிட்டு சுன்னாவின் தெளிவான ஆதாரங்களுடன் ஒவ்வாருவரும் விளங்கி செயற்படுத்திட வேண்டும் குறிப்பாக பிள்ளைகள் தங்களது பெற்றோர்களுக்காக தாங்களே முன்வந்து இக்கடமைகளை செய்திட படித்துக் கொள்ளவேண்டும். இதன் நிமித்தமே ஜனாஸா கடமைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் இங்கே விபரித்துள்ளேன். மரணத்தருவாயில் இருப்பவருக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்தல்: لقُلُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ - உங்களில் மரணத்தருவாயில் இருப்ப வருக்கு லாஇலாஹ இல்லல்லாஹு என்று சொல்லிக் கொடுங்கள். مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ யாருடைய கடைசி வார்த்தை லாஇலாஹ இல்லல்லாஹு என்றிருக்கிறதோ அவர் என்றாவது ஒருநாள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடுவார். என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் முஆத் (ரலி), ஆதாரம்: அபூதாவூத்(3116) முஸ்லிம் (916), மரணத்தருவாயில் இருப்பவருக்கு மிக அருகாமையில் இருந்து அவரது காதுக்கு கேட்கும் விதத்தில் கலீமாவை சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனை தல்கீன் என்றும் கூறப்படும். அது தவிர யாஸீன் சூரா ஓத வேண்டும் என்று கூறுவதற்கு ஸஹீஹான ஹதீஸ் எதுவுமில்லை. (இது பற்றிய விபரத்தை மரணித்தவருக்கு பயனளிப்பவை என்ற கட்டுரையில் பார்க்கவும்) மையத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி வைக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. விரும்பினால் அத்திசையில் வைக்கலாம். ஆனால் இது பற்றி வரக்கூடிய ஹதீஸ் பலஹீனமானதாகும். உயிர் பிரிந்து விட்டால்:-
Loading comments…