அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவுடைய கொள்கை இமாம் தஹாவி
عقيدة أهل السنة والجماعة تأليف: الإمام أبي جعفر الطحاوي رحمه الله அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவுடைய கொள்கை விளக்கம் இமாம் அபூ ஜஅஃபர் அத்தஹாவீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஹிஜ்ரி (239 - 321) தமிழில்: உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம் About This Book Name of the Book: AHLUS SUNNAH WAL JAMA'A KOLKAIKAL | Language: Tamil | Date of Publication: November 2007 | Edition : 2nd (Oct 2019) | Total Pages: 64 | Copies: 3000 | Printed by: Patel Graphics, Chennai - 6. PUBLISHED BY: DARUL HUDA QUALITY ISLAMIC BOOK PUBLISHERS # 211 (102), 1st Floor, Linghi Street, Mannady, Chennai-600001. Phone : +91-44-25247866, darulhuda.chennai@gmail.com Mobile +91-98401 74121 www.darulhuda.net ஆசிரியர் அறிமுகம் பெயர் : அஹ்மது தந்தை : முஹம்மது பாட்டனார் : ஸலாமா இப்னு அப்துல் மலிக் குடும்பம் : அஸ்து வமிசம் : கஹ்தான் ஊர் : தஹா நாடு : எகிப்து பிறப்பு : ஹிஜ்ரீ 239 இறப்பு : ஹிஜ்ரீ 321 இவர்களை இமாம் அபூ ஜஅஃபர் அத்தஹாவீ என்று அழைக்கப்படும். இவர்களின் தாய், தந்தை மற்றும் தாய் மாமனான இஸ்மாயீல் இப்னு யஹ்யா முஸ்னீ ஆகியோர் பெரும் அறிஞர்களாக விளங்கினார்கள். இமாம் அவர்கள் ஹதீஸ்கலை வல்லுணராகவும் ஃபிக்ஹு கலை அறிஞராகவும் ஹதீஸ்களை அறிவிப்பதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, நம்பத் தகுந்த அறிவிப்பாளராகவும் விளங்கினார்கள். அனைத்துத் தரப்பு அறிஞர்களும் இமாமைக் கண்ணியப்படுத்தினார்கள். இமாம் அபூ ஹனீஃபாவின் (ரஹ்) ஆய்வுகளை அதிகம் அறிந்தவராகவும் ஏனைய அறிஞர்களின் ஆய்வுகளை கற்றுத் தேர்ந்தவராகவும் ஃபிக்ஹு, ஹதீஸ் அல்லாத மற்ற கல்விகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இமாம் தஹாவீ விளங்கினார்கள். இமாம் அவர்கள் ஏறத்தாழ நாற்பது நூற்கள் எழுதியுள்ளார்
Loading comments…