இஸ்லாத்தின் உண்மையான நம்பிக்கை கோட்பாடும் அதற்கு எதிரானவைகளும்
இஸ்லாத்தின் உண்மையான நம்பிக்கை கோட்பாடும் அதற்கு எதிரானவைகளும் العقيدة الصحيحة وما يضادها تاميلي மதிப்பிற்குரிய: அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாஸ் (ரஹ்) இஸ்லாத்தின் உண்மையான நம்பிக்கை கோட்பாடும் அதற்கு எதிரானவைகளும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விடயங்களும் العقيدة الصحيحة وما يضادها تاميلي பக்கம் – 42 شركاء التنفيذ: ISLAMHOUSE.com دار الإسلام جمعية الربوة رواد الترجمة المحتوى الإسلامي يتاح طباعة هذا الإصدار ونشره بأي وسيلة مع الالتزام بالإشارة إلى المصدر وعدم التغيير في النص. Telephone: +966114454900 @ceo@rabwah.sa P.O.BOX: 29465 RIYADH: 11557 www.islamhouse.com அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். முகவுரை சர்வ புகழும் அழ்ழாஹ்வுக்கே உரித்தாகட்டும் ஸலாத்தும் ஸலாமும் இறுதித்தூதரான நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாவதாக சரியான நம்பிக்கைக் (அகீதா) கோட்பாடானது இஸ்லாமிய மார்க்த்தின் அடிப்படையாகவும் இச்சன்மார்க்கத்தின் அத்திவாரமாகவும் இருப்பதினால் எனது இச்சொற்பொழிவில் இத்தலைப்பு குறித்து உரையாற்றுவது பொருத்தமெனக் கருதுகிறேன். மிகச்சரியான இஸ்லாமிய அடிப்படைக் கோட்பட்டின் விளைவாக தோன்றும் வார்த்தைகளும் செயல்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது அல்குர்ஆன் அல்ஹதீஸின் ஆதாரங்களினால் அறியப்படுகின்ற விடயமாகும்.இந்த அடிப்படைக் கொள்கையின்படி அமையாத சொல் செயல்கள் வீணானவையாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் (இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு வேதம் கொடுக்கப்ட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களின் உணவு
Loading comments…