ஸுன்னா பற்றி தெளிவு பெறுவது எப்படி? — front cover

ஸுன்னா பற்றி தெளிவு பெறுவது எப்படி?

ஆசிரியர்: கலாநிதி யூ.எல்.ஏ. அஷ்ரப் Ph. D (Al-Azhar)

ஸுன்னா பற்றி தெளிவு பெறுவது எப்படி?  நூலசிரியர் : கலாநிதி யூ. எல். ஏ. அஷ்ரப் Ph. D (Al-Azhar)  தலைவர் தாருல் ஹதீஸ்  உதவிப் பேராசிரியர்  மன்னர் காலித் பல்கலைக்கழகம்  சவூதி அரேபியா  வெளிஈடு தாருல் ஹதீஸ் கொழும்பு 2003 ஸுன்னா என்றால் என்ன? ‘ஸுன்னா’ என்ற அறபுப் பதத்திற்கு பாதை, வழிமுறை என்பது கரத்தாகும். ஹதீஸ்கலை வல்லுனர்கள் (ஸுன்னா) என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றனர் :  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், உடல் அமைப்பு முறை, குண நெறி ஆகியவைகளாகும். இவை நபியவர்களுக்கு தூதுஸ்ரீ கிடைப்பதற்கு முன்பு நிகழ்ந்தாலும் அல்லது பின்பு நிகழ்ந்தாலும் ஸுன்னாஸ்ரீ என்றே சொல்லப்படும்.  இதே கருத்தைத்தான் ஹதீஸ் என்ற பதமும் கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் அல்கிதாப், வஸ்ஸுன்னாஸ்ரீ, அர்குர்ஆன், வல் ஹதீஸ் என்று பிரயோகிப்பது இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாகும். எனவே ஹதீஸ் கலை வல்லுணர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிய சகல விபரங்களையும் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் இவைகளில் எதை ஆதாரமாகக் கொள்வது எதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதை வேறுபடுத்தும் வரைவிலக்கணங்களைத் தரும் முயற்சியில் இவர்கள் இறங்கவில்லை. இந்தப் பணியில் உஸூலிய்யூன்கள் (இஸ்லாமிய சட்ட மூல தத்துவ அறிஞர்கள்) ஈடுபட்டார்கள். எனவே அவர்கள் ஸுன்னா என்பதற்குப் பின்வரும் வரைவிலக்கணத்தை முன்வைக்கிறார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் கிடைத்த பின்பு கூறிய, செய்த, அங்கீகாரம் வழங்கிய விடயங்களாகும்.  எனவே நபித்துவத்திற்கு முந்திய, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகள் ஆ

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…