அகீதா, ஃபிக்ஹ் - முதலாம் ஆரம்ப நிலை வகுப்பு
சவூதி அரேபியா கல்வி அமைச்சு, தன்ஸீல் அகடமி தஃவாப் பிரிவு MINISTRY OF EDUCATION, THANZEEL ACADEMY FOR ISLAMIC STUDIES அகீதா, ஃபிக்ஹ் العقيدة والفقه தமிழ் மொழி اللغة التاميلية முதலாம் ஆரம்ப நிலை வகுப்பு الصف الأول الابتدائي நூல் : அகீதா, ஃபிக்ஹ் - முதலாம் ஆரம்ப நிலை வகுப்பு தொகுப்பு : : கல்வி அமைச்சு, சவூதி அரேபியா. பக்கங்கள் : 61 மூல மொழி : அரபு மொழியாக்கம் : ஹிஸ்புல்லாஹ் (அன்வாரி) வடிவமைப்பு : தன்ஸீல் அகடமி. வெளியீடு : தன்ஸீல் அகடமியின் தஃபாப் பிரிவு. ஈமெயில் : thanzeeledu@gmail.com THANZEEL ACADEMY FOR ISLAMIC STUDIES தன்ஸீல் அகடமி வாட்சப் குழுமத்தில் இணைவதற்கு Scan அல்லது click செய்யவும். முன்னுரை எழுதக் கற்றுத் தந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அவன் மனிதர்களுக்கு அவர்கள் அறியாத அனைத்தையும் கற்றுக்கொடுத்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும், ஈடேற்றமும் என்றென்றும் உண்டாவதாக. அவர்கள் மக்களை அறியாமை எனும் இருளிலிருந்து கல்வி எனும் வெளிச்சத்திற்கு வழிகாட்டியவர்கள். அகீதா என்பது அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு பகுதியாகும். இதில் அல்லாஹ்வைப் பற்றியும், ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அம்சங்கள் பற்றியும் ஒருவர் கற்றுக்கொள்வார். இதுவே தலை சிறந்த அறிவாகும். இதைக் கற்பதால் மாத்திரமே ஒருவரின் நற்செயல்களுக்கான கூலிகள் கிடைப்பதும், நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதும் அமைந்துள்ளது. ஒருவர் மனநிம்மதியுடனும், சந்தோசத்தோடும் வாழ்வதற்கு இவ் அறிவு அவசியமாகிறது. அவ்வாறே மார்க்க சட்டங்கள் பற்றி கற்றுக்கொள்வதும் தலையாய கடமையாகும். இதன் மூலம் வணக்கங்களை எவ்வாறு சரிவர நிறைவேற்றுவது எனும் அறிவு ஒருவருக்குக் கிடைக்கிறது. நபி அவர்கள் கூறினார்
Loading comments…