ஸஹீஹ் முஸ்லிம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஸஹிஹ் முஸ்லிம் தமிழாக்கம் முழுமையான பாகம் மூலம் : சென்னை ரஹ்மத் அறக்கட்டளை ஆதாரம் : http://onlinepj.com ஆக்கம் : http://sunmarkam.blogspot.com இலவச வெளியீடு :.... அஸ்ஸலாமு அலைக்கும்... வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் மாபெரும் உதவியாலும், கிருபையாலும், தீனுல் இஸ்லாத்தின் அடிப்படைகளான அல்குர்ஆன், அல்ஹதீஸ் கிரந்தங்களில்,மிகவும் முக்கிய இடத்தை வகிக்கும் ஸஹீஹ் முஸ்லிம், முழுமையான பாகம் தமிழில் மின்நூல் வடிவில், அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸஹீஹ் முஸ்லிமின் இந்த முழுமையான பாகமானது, ஆன்லைன் பிஜெ தளத்தில் உள்ள, ரஹ்மத் அறக்கட்டளை நான்கு பாகங்களாக வெளியிட்ட ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பை மூல ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கம் விற்பனை நோக்கிலோ,வேறெந்த ஆதாய நோக்கத்திலோ உருவாக்கப்பட்டதல்ல.இதன் பொருட்டு அல்லாஹ்வின் மாபெரும் பொருத்தத்தையும், இம்மை மறுமை பலன்களையும் எதிர்நோக்கி, முழுக்க முழுக்க தமிழ் இஸ்லாமியச் சமுதாய மக்களின் எளிமையான பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சில விளக்கங்கள் ஸஹீஹ் முஸ்லிமானது அத்தியாயம் இரண்டு, ஈமானில் இருந்து துவங்குகிறது.ஹதீஸ் எண்களும் அத்தியாயம் ஈமானில் இருந்து துவங்குகிறது.அத்தியாயம் ஒன்று ஹதீஸ் கலையானது ஹதீஸ்கள், அதன் அறிவிப்பாளர்கள்,மற்றும் படித்தரங்களை விளங்கிக்கொள்ள கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு அத்தியாயம் அல்லது ஒரு தலைப்பில் ஹதீஸ்களை படிக்கும்போது, அதுகுறித்த அனைத்து அறிவிப்புகளையும் படியுங்கள்.அதன்மூலம் பல்வேறுபட்ட அறிவிப்பாளர்களின் அறிவிப்புகள், விதிவிலக்கான பிற்கால சட்டமாற்றம், இவைகளில் தெளிவுபெற ஏதுவாக இருக்கும். இ
Loading comments…